(அரசாங்க நிறுவனங்களில் ஆட்களை வேலைக்கு சேர்த்தவர்களுக்கும், சேர்ந்தவர்களுக்கும் ஆப்பு)
அரசாங்க நிறுவனங்களுக்கு அனுமதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு மேலதிகமாக வேறு ஊழியர்களை சேவையில் இணைத்துக் கொண்டு அவர்களுக்கு சம்பளம் வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
திறைசேரியின் முகாமைத்துவ திணைக்களத்தின் முழுமையான அங்கீகாரம் இன்றி அரச நிறுவனங்களுக்கான பணிக் குழுவினரை இணைத்துக் கொள்ளவும், அவர்களுக்கு சம்பளம் வழங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான சுற்றுநிரூபத்தை நேற்று (31) நிதி அமைச்சு வெளியிட்டிருந்தது.
இதற்கு மாற்றமாக ஆட்சேர்ப்புக்களை மேற்கொண்ட உரிய நிறுவனத்தின் தலைவர், மாகாண பிரதம செயலாளர், நிதிப் பிரிவின் தலைவர், அமைச்சின் செயலாளர் ஆகியோர் பொறுப்புக் கூற வேண்டும் என்று சுற்றுநிரூபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
(அரசாங்க தகவல் திணைக்களம்)