• Sat. Oct 11th, 2025

இலங்கை வரும் பொது நலவாயத்தின் செயலாளர் நாயகம்

Byadmin

Jul 31, 2018

(இலங்கை வரும் பொது நலவாயத்தின் செயலாளர் நாயகம்)

பொதுநலவாயத்தின் செயலாளர் நாயகம் பெட்ரீசியா ஸ்கொட்லன்ட் நாளை(01) இலங்கைகு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

2016 ஏப்ரல் மாதம் செயலாளர் நாயகமாக பதவியேற்றதன் பின்னர் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயம் இதுவாகும்.

இந்த விஜயத்தின் போது, செயலாளர் நாயகம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் திலக் மாரபனவையும் சந்திக்க உள்ளார்.

பொதுநலவாய நாடுகளுக்கு இடையிலான வர்த்தகத்தை மேம்படுத்துதல் 2018 ஆம் ஆண்டில் பொதுநலவாய அரசாங்க தலைவர்களுடன் லண்டனில் இடம்பெற்ற கூட்டத்தில் (CHOGM) உடன்பட்ட முடிவுகளை நிறைவேற்றுவதில் விரிவான ஆதரவையும் ஓத்துழைப்பையும் பெற்றுக்கொள்வது தொடர்பில் ஆய்வு செய்வது, செயலாளர் நாயகத்தின் கூட்டங்களின் பிரதான நோக்கமாகும்.

இந்த கலந்துரையாடல்கள் பொதுநலவாய நீலச் சாசனத்தினை நடைமுறைப்படுத்துவதனையும் உள்ளடக்கியிருக்கும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *