• Sun. Oct 12th, 2025

உலகம் முழுவதும் ATM இயந்திரங்களை பயன்படுத்துவோருக்கு FBI அவசர எச்சரிக்கை!

Byadmin

Aug 17, 2018

(உலகம் முழுவதும் ATM இயந்திரங்களை பயன்படுத்துவோருக்கு FBI அவசர எச்சரிக்கை!)

உலகளாவிய ரீதியில் செயற்படும் ATM இயந்திரங்களை பயன்படுத்துவோருக்கு FBI அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ATM இயந்திரங்கள் ஊடாக பணம் திருடும் பாரிய சைபர் தாக்குதல் மேற்கொள்ளும் ஆபத்து உள்ளதாக FBI அமைப்பினால், நிதி நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கணக்கு உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ATM அட்டைகளுக்கு சமமான அட்டை ஒன்றை பயன்படுத்தி, சைபர் குற்றவாளிகள், கணக்கு உரிமையாளர்களின் பணத்தை திருடுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதற்காக வங்கி கட்டமைப்பில் உள்ள ATM அட்டை உரிமையாளர்களின் தரவுகளை சைபர் திருடர்கள் திருடி அதன் ஊடாக மோசடி செய்வதற்கு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் வார இறுதியில் வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளமையினால் இந்த தாக்குதல் அவ்வாறான நாட்களில் மேற்கொள்வதற்கு வாய்ப்புகள் உள்ளதாக FBI அமைப்பு தெரிவித்துள்ளது.
சிறிய காலப்பகுதியில் அதிக பணத்தை பெற்றுக்கொள்வதே சைபர் குற்றவாகளிகளின் நோக்கமாக உள்ளது.
ஐரோப்பா உட்பட உலகின் அனைத்து நாடுகளிலும் இந்த சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்படுவதற்கும் வாய்ப்புகள் உள்ளதாக FBI அமைப்பு எச்சரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *