அதிசயங்களும், ஆச்சரியங்களும் நிறைந்த உலகம் தான் நமது புவி. ஓர் செல் உயிரினத்தில் தோன்றி ஐந்தறிவு ஜீவன் இருந்த வரை இயற்கையோடு மட்டும் சுழன்றுக் கொண்டிருந்த உலகு, ஆறறிவு ஜீவனின் பிறப்பிற்கு பிறகு மாற்றத்தைக் காண ஆரம்பித்தது.
மக்கள் சொத்தை அரசியல்வாதிகள் சுரண்டுவதைப் போல, அனைத்து ஜீவராசிகளுக்கும் பொதுவான இந்த உலகை மனிதன் சுரண்ட ஆரம்பித்தான். இதன் விளைவு, செயற்கை வளர்த்து, இயற்கை அழித்தது.
இன்று தனது அறியாமையைக் கண்டு வெட்கி, அழும் மனிதருக்கு, வாழ்வியல் குறித்து தனித்தனி குணாதிசயம் கொண்ட விலங்குகள் என்ன பாடம் எடுக்கின்றன என்று பார்க்கலாம்…
எறும்பு
பணமும், புகழும் சேர்ந்த பின், நம்மை யாரென்ன செய்திட முடியும் என்று சோம்பேறியாக இருப்பவன் எறும்படம் இருந்து சுறுசுறுபைக் கற்றுக் கொள்ள வேண்டும். உனக்கு பின் ஆயிரமல்ல… கோடி பேர் விரட்டி வருகின்றனர்.
தேனீ
பதவி உயர்வு கிடைத்ததும், தன் வேலையையும் சேர்த்து மற்றவரை செய்ய சொல்லாது. தேனீயைப் போல நல்ல உழைப்பாளியாக இருக்க வேண்டும்.
நாய்
மனிதன் மறந்த / இழந்த மாபெரும் சொத்து, நன்றி. நன்றியும், நன்றியுணர்வும் உள்ள வரை தான் நாம் மனிதர், இல்லையேல் வெறும் ஜடம்.
காகம்
காகம் மனிதர்களுக்குக் கூட்டுறவை கற்பிக்கிறது. தான், தான் என்று வாழ்பவன் தன் இனத்தையும், சமூகத்தையும் மறந்துவிடுகிறான். ஒன்றிணைந்து வாழ்வதே ஓர் நல்ல சமூக மாற்றத்தை வெளிக்கொண்டு வரும்.
குதிரை
தோல்விக் கண்டு விழுந்தாலும் வீருக்கொண்டு எழ வேண்டும் என்பதை தான், குதிரை மனிதருக்குக் கற்பிக்கிறது. நிலையற்ற வெற்றியும், தோல்வியும் கண்டு நிலைக்குலைந்து போய்விடாதே.
சிங்கம்
கம்பீரம், தலைமை பண்பு, வேகம் மட்டும் அல்ல விவேகமும் வேண்டும். ஆளுமைத் திறன் இல்லையேல், என்ன அறிவு இருந்தாலும் அது வெறும் குப்பைக் கிடங்கு தான்.
யானை
பலம்! எத்தனை எதிரிகள், சூழ்ச்சிகள் வந்தாலும் எதிர்த்துப் போராடும் குணம். இதை தன் தான் யானை மனிதனுக்கு கற்றுக் கொடுக்கிறது.
நரி
தந்திரம்! சூழ்ச்சி செய்ய அல்லாது, வீழ்ந்துவிடாமல் இருக்க, தந்திரம் கற்றுக் கொள்தல் நல்லது.