(எகிப்த்தியர்களின் ரகசியம் அம்பலமானது!)
பண்டையகால எகிப்தியர்கள் இறந்து விட்டால் அவர்களது உடல் பழுதடையாமல் இருக்க பதப்படுத்தப்பட்டு அடக்கம் செய்யப்படும்.இப்போது அந்த மம்மிகளை ஆராச்சி செய்து பலவிடயங்களை அறிவதில் ஆராய்ச்சியாளர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
உடல்களை பதப்படுத்த என்ன பொருட்கள் உபயோகித்துள்ளார்கள் என்பது இதுவரை கண்டறியப்படாத ஒன்றாக இருந்தது.
பண்டைய எகிப்தைச் சேர்ந்த பதப்படுத்தப்பட்ட மனித உடலான ‘மம்மி’ ஒன்றை ஆராய்ச்சி செய்ததில், உடல்களைப் பாதுகாக்க பயன்படுத்தப்பட்ட பொருட்கள் என்னவென்று கண்டறியப்பட்டுள்ளன.
கி.மு. 3500 – 3700 ஆண்டுகளுக்கு முந்தைய மம்மி ஒன்றை ஆராய்ச்சி செய்ததில் எள்ளில் இருந்து எடுக்கப்பட்டதாக கருதப்படும் எண்ணெய், கோரை புற்களின் வேர்களில் இருந்து எடுக்கப்பட்ட சாறு, வேல மரப் பிசின் மற்றும் பைன் மரத்தில் இருந்து எடுக்கப்பட்டதாக கருதப்படும் பிசின் ஆகியன உடல்களை மம்மிகள் ஆக்க பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்