(விசேட மேல் நீதிமன்றத்தின் பணிகள் இன்று ஆரம்பம்)
அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியமை மற்றும் இலஞ்ச ஊழல் முறைகேடுகள் தொடர்பில் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு ஸ்தாபிக்கப்பட்ட விசேட மேல்நீதிமன்றம் இன்று(21) நீதி அமைச்சர் தலதா அத்துகோரளவினால் திறந்துவைக்கப்படவுள்ளது.
விசேட மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதியரசர்கள் குழாத்தில், மேல்நீதிமன்ற நீதிபதிகளான சம்பத் அபேகோன், சம்பத் விஜேரத்ன ஆகியோரும் சம்பா ஜானகி ராஜரத்ன ஆகியோரும் அடங்குகின்றனர்.
கொழும்பு போக்குவரத்து நீதிமன்றம் ஸ்தாபிக்கப்பட்டுள்ள கட்டடத்தில் இந்த நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது.