(மாகாண கிரிக்கெட் அணிகள் 05 அல்லது 06 ஆக அதிகரிக்கப்பட வேண்டும்)
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இருபதுக்கு 20 லீக் கிரிக்கெட் அணிகளுக்கு எண்ணிக்கை தொடர்பில் முன்னாள் கிரிக்கெட் வீரர் மஹேல ஜெயவர்தன கருத்துத் தெரிவித்துள்ளார்.
இம்முறை குறித்த போட்டிக்கு 04 அணிகள் பங்கேற்பதோடு, ஒரு அணிக்கு 21 வீரர்கள் வீதம் மொத்தம் 84 வீரர்கள் விளையாடவுள்ளனர்.
எவ்வாறாயினும், அணிக்கு தலா 11 வீரர்கள் கணக்கில் 44 வீரர்களுக்கு வாய்ப்பு கிட்டுவதோடு, மேலும் 40 வீரர்களுக்கு ஆசனங்களில் அமர்ந்து இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து மஹேல தெரிவிக்கையில், இன்னும் இரு அணிகள் விளையாடும் வாய்ப்பு உள்ளது. இது குறித்து ஏற்பாட்டாளர்கள் யோசிக்க வேண்டும் என்பதே மஹேலவின் யோசனை..
இது குறித்து அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் தெரிவிக்கையில்;
“ மாகாண அணிகள் ஐந்து அல்லது ஆறு விளையாட வேண்டும் என்பது எனது விருப்பம் மட்டுமா? இப்போட்டியில் 44 வீரர்கள் விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ளதோடு, மேலும் 40 வீரர்கள் ஆசனங்களில் அமர்ந்திருக்க வேண்டும். இன்னும் இரு அணிகளை சேர்க்கலாமே?”