(நாளை முதல் விஷேட புகையிரத சேவைகள்)
கண்டி தலதா மாளிகையில் நடைபெறவுள்ள எசல பெரஹெர நிகழ்வை முன்னிட்டு, நாளை(21) முதல் எதிர்வரும் 25 ஆம் திகதி வரையில் கொழும்பு கோட்டையில் இருந்து கண்டி நோக்கி செல்வதற்காக விஷேட புகையிரத சேவைகளை முன்னெடுக்க இலங்கை புகையிரத சேவைகள் தீர்மானித்துள்ளது.
குறித்த காலப்பகுதியில் காலை 9.50 இற்கு கொழும்பு கோட்டையில் இருந்து கண்டி நோக்கி புகையிரதம் ஒன்று பயணிக்கவுள்ளது.
அத்துடன் கண்டியில் இருந்து காலை 11.45 இற்கு கொழும்பிற்கும் நாவலபிட்டியவிற்கும் இரு புகையிரதங்கள் பயணிக்கவுள்ளது.
மேலும், எதிர்வரும் 26 ஆம் திகதி கொழும்பு கோட்டையில் இருந்து காலை 7.05 இற்கும் கண்டியில் இருந்து இரவு 7 மணிக்கும் இரு புகையிரதங்கள் பயணிக்கவுள்ளதாக இலங்கை புகையிரத சேவைகள் தெரிவித்துள்ளது.