(முஸ்லிம்களிடம் ஆயுதம் உள்ளதா ? அரசாங்கம் நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்)
முஸ்லிம்களிடம் ஆயுதம் உள்ளதா ? என்பதை பாதுகாப்பு துறையினர் நாட்டிற்கு தெளிபடுத்த வேண்டும் என மாகல்கந்தே சுதந்த தேரர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று (19) கொழும்பில் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் முன்னாள் விடுதலை புலி உறுப்பினர்கள் விடுதலை புலிகளின் ஆயுதங்கள் முஸ்லிம்களிடம் உள்ளதாக முன்வைத்த குற்றச்சாட்டு குற்றசாட்டு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இதனை குறிப்பிட்டார். இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர் ,
முஸ்லிம் அரசியல் வாதிகளிடம் ஆயுதம் உள்ளதா ? அது சிவில் மக்களிடம் போய் சேர்ந்து இருந்தால் அதனால் நாட்டிற்கு ஏற்பட உள்ள நாட்டிற்கு ஏற்பட உள்ள பிரதிகூலங்கள் என்ன என்பதை பாதுகாப்பு தரப்பு தெளிவுபடுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.