(ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் இன்று இலங்கை விஜயம்)
ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் இட்சுனோரி ஒனொடேரா இன்று (20) இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
ஜப்பானின் பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் இலங்கை வருவது வரலாற்றில் இதுவே முதல் தடவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை வரும் அவர், ஹம்பாந்தோட்டை துறைமுகம், கொழும்பு துறைமுகம் மற்றும் திருகோணமலை துறைமுகம் ஆகியவற்றிற்கும் விஜயம் மேற்கொள்வார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையுடனான நல்லுறவை மேம்படுத்தும் நோக்கில் இலங்கை வரும் அவர், ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடல்களையும் மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.