(இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளை விரிவுபடுத்த இம்ரான் ஆர்வம்)
இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான அனைத்து துறைகளிலும் இருதரப்பு உறவுகளை விரிவுபடுத்த வேண்டிய அவசியம் இருக்கின்றது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இன்று(20) காலை இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளதாக ரேடியோ பாகிஸ்தான் செய்தி வெளியிட்டுள்ளது.
இரு நாடுகளும், அரசியல், பொருளாதார, பாதுகாப்பு மற்றும் சுற்றுலா உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் வலுவானதாகவும், நட்பாகவும் செயற்பட வேண்டும் என இம்ரான் கான் தெரிவித்துள்ளதாக ரேடியோ பாகிஸ்தான் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.