(ஞானசார தேரர் வைத்தியசாலையில் இருந்து சிறைச்சாலைக்கு)
ஞானசார தேரர் வைத்தியசாலையில் இருந்து சிறைச்சாலைக்கு அழைத்துச்செல்லப்படவுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நேற்றைய தினம் அவருக்கு பிணை வழங்குமாறு செய்யப்ப்பட்ட மேன்முறையீடு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட அதேவேளை அது எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது.
6 வருடம் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ள ஞானசார தேரர் சத்திர சிகிற்சை ஒன்றிற்கான ஶ்ரீ ஜயவர்தன புர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த வாரம் அவருக்கு சத்திர சிகிற்சை மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. MN