(ஒன்றிணைந்த எதிரணியின் எதிர்ப்பு பேரணிக்காக கொழும்பில் 05 இடங்கள்)
எதிர்வரும் 05ஆம் திகதி ஒன்றிணைந்த எதிர்கட்சியினரால் கொழும்பில் நடத்தத் தீர்மானித்துள்ள, எதிர்ப்பு பேரணிக்காக கொழும்பு நகரில் 05 இடங்கள் சட்டரீதியாக ஒதுக்கப்பட்டுள்ளதாக, பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த் தெரிவித்துள்ளார்.
மேலும், குறித்த எதிர்ப்பு பேரணியைத் தடுப்பதற்காக அரசாங்கம் நீதிமன்ற அனுமதியைப் பெறும் என்பதால், குறித்த இடங்கள் குறித்து இரகசியம் காக்கப்படுவதாகவும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று(29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.