• Mon. Oct 13th, 2025

பாகிஸ்தான் அரசுக்கு ஆண்டுதோறும் ரூ.185 கோடியை மிச்சப்படுத்திய இம்ரான் கான்

Byadmin

Sep 17, 2018

(பாகிஸ்தான் அரசுக்கு ஆண்டுதோறும் ரூ.185 கோடியை மிச்சப்படுத்திய இம்ரான் கான்)

பாகிஸ்தானில் நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் அதிக தொகுதிகளை கைப்பற்றி இம்ரான் கானின் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி ஆட்சி அமைத்தது.

பிரதமர் இல்லத்தில் ஆடம்பரங்கள் தலைவிரித்தாடுகின்றன. நமது மக்களுக்கான நலத்திட்டங்களுக்கு செலவிட பணம் இல்லை. நான் பிரதமர் இல்லத்தில் தங்கப் போவதில்லை. இஸ்லாமாபாத்தில் 3 படுக்கை அறை கொண்ட ராணுவ செயலாளர் வீட்டில் தங்க இருக்கிறேன் என இம்ரான் கான் வெற்றி பெற்று பிரதமராக பதவியேற்ற பின்னர் பலமுறை செய்தியாளர்கள் சந்திப்பில் தெளிவுப்பட கூறியுள்ளார்.

மேலும், ஆடம்பர செலவுகளை தவிற்கும் நோக்கில் பிரதமர் மாளிகையில் இருக்கும் சொகுசு கார்களை ஏலத்தில் விடப்போவதாகவும் அவர் அறிவித்தார்.

இதனால் பொது மக்களின் வரி பணம் ஆடம்பரத்திற்காகவும் மற்றும் அரசு விதிகளுக்காகவும் பிரதமரால் வீணாக்கப்படவில்லை என்ற நற்செய்தி மக்களுக்கு கொண்டு செல்லப்படும் என துபாயில் இருந்து வெளியாகும் கல்ப் பத்திரிகை இம்ரான் கானுக்கு பாராட்டு தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் அரசு பிரதமர் இல்ல வளாக செலவுகளுக்காக ஆண்டுதோறும் ரூ.98 கோடி நிதி ஒதுக்கீடு செய்கிறது. இதேபோன்று பிரதமர் இல்ல ஊழியர்களுக்காக ரூ.70 கோடி செலவிடப்படுகிறது. மேலும், உயரதிகாரிகள் மற்றும் விருந்தினர்களின் வருகைக்காக அவர்களுக்கு அளிக்கும் பரிசுகளுக்கு ரூ.15 கோடியும் மற்றும் புதுப்பித்தல் மற்றும் அலங்கரித்தல் பணிகளுக்காக ரூ.1.5 கோடியும் செலவிடப்படும்.

இந்நிலையில், தனக்காக ஒதுக்கப்பட்ட அலுவலக இல்லத்தில் தங்காமல் ரூ.185 கோடி அரசு நிதியை சேமிக்க முடிவு செய்துள்ளார். இதுபோன்ற செலவுகளை குறைப்பதற்கான இம்ரான் கானின் இந்த வாக்குறுதி அவரது மதிப்பினை பாகிஸ்தான் மட்டுமின்றி உலகம் முழுவதும் நிச்சயம் உயர்த்தும். #ImranKhan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *