• Sat. Apr 4th, 2026

வீட்டிலேயே தேங்காய் பிஸ்கெட் செய்வது எப்படி?

Byadmin

Feb 15, 2026

(வீட்டிலேயே தேங்காய் பிஸ்கெட் செய்வது எப்படி?)

தேவையான பொருட்கள் :

மைதா மாவு – 100 கிராம்

வெண்ணெய் – 80 கிராம்
சர்க்கரை – 40 கிராம்
வறுத்த தேங்காய் துருவல் – 25 கிராம்
வெனிலா சுகர் பவுடர் – அரை தேக்கரண்டி
பாதாம் பருப்பு தூள் – 15 கிராம்
உப்பு – சிட்டிகை

செய்முறை :

வெண்ணெயை உருக்கி கொள்ளவும்.

உருக்கிய வெண்ணெயுடன் பதப்படுத்தப்பட்ட தேங்காய் துருவல், பாதாம் பருப்பு தூள் சேர்த்து நன்றாக கலக்கவும்.

பின்னர் அதனுடன் சர்க்கரை, மைதா மாவு, வெனிலா சுகர், உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.

அனைத்தையும் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசையவும். பிசைந்த மாவை பாலிதின் பையில் போட்டு அரை மணி நேரம் ஃபிரிட்ஜில் வைக்கவும்.

அரை மணி நேரத்திற்கு பின் ஃபிரிட்ஜிலிருந்து எடுத்து குளிர்ச்சி தன்மை போனவுடன் சப்பாத்தி போல் சற்று தடிமனாக தேய்த்து, விரும்பிய அச்சுகள் கொண்டு வெட்டி, எண்ணெய் தடவிய மெலிதான ட்ரேயில் சிறிது இடைவெளி விட்டு வைக்கவும். அனைத்து மாவையும் இவ்வாறு செய்து கொள்ளவும்.

செய்தவற்றை 180 டிகிரியில் முற்சூடு செய்யப்பட்ட மைக்ரோவேவ் அவனில் 15 நிமிடம் வரை வேக வைத்து எடுக்கவும்.

சுவையான தேங்காய் பிஸ்கெட் தயார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *