(ஒன்றிணைந்த எதிர்கட்சியின் கலந்துரையாடல் இன்று)
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் குறித்து ஒன்றிணைந்த எதிர்கட்சியின் ஆயத்தம் தொடர்பில் முழுமையான இரண்டு கலந்துரையாடல் சுற்றுக்கள், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று(18) நடைபெறவுள்ளதாக ஒன்றிணைந்த எதிர்கட்சியின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, ஒன்றிணைந்த எதிர்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவானது இன்று(18) காலை 11.00 மணியளவில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் கலந்துரையாடலுக்காக ஒன்றுகூடவுள்ளது.
குறித்த கலந்துரையாடலுக்கு ஒன்றிணைந்த எதிர்கட்சியின் பாராளுமன்றத்தினை பிரதிநித்துவப்படுத்தும் 69 பாராளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்கவுள்ளது.
மேலும், முன்னாள் ஜனாதிபதியின் தலைமையில் இன்று(18) மாலை 5.30 மணியளவில் ஒன்றிணைந்த எதிர்கட்சியின் கட்சித் தலைவர்கள் இடையே கொழும்பு 07 விஜேராம மாவத்தையில் அமையப் பெற்றுள்ள முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் மற்றுமொரு கலந்துரையாடல் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.