(எமில் மற்றும் ரங்கஜீவ தொடர்ந்தும் விளக்கமறியலில்)
2012 ம் ஆண்டில் வெலிக்கடை சிறைச்சாலையில் ஏற்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள எமில் ரஞ்சன் மற்றும் நியோமால் ரங்கஜீவ ஆகியோரை எதிர்வரும் ஒக்டோபர் 02ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் இன்று(18) உத்தரவிட்டார்.
2012 ஆம் ஆண்டில் சட்டவிரோதமாக உள்நுழைந்து அங்கிருந்த சிறைக் கைதிகள் 27 பேரை சுட்டுக் கொன்றமை தொடர்பில் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
எமில் ரஞ்சன் இதன் போது சிறைச்சாலைகள் ஆணையாளராகவும் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவின் பொறுப்பதிகாரியாக பொலிஸ் பரிசோதகர் நியோமால் ரங்கஜீவவும் கடமையாற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.