• Tue. Oct 14th, 2025

இஸ்ரேல் துப்பாக்கிச்சூட்டில் பாலஸ்தீனியர் உயிரிழப்பு

Byadmin

Sep 26, 2018

(இஸ்ரேல் துப்பாக்கிச்சூட்டில் பாலஸ்தீனியர் உயிரிழப்பு)

ஹிட்லரால் விரட்டியடிக்கப்பட்ட  யூதர்களுக்கு,  பலஸ்தீனில் தங்க இடம் கொடுத்து, ஆதரவு தெரிவித்த முஸ்லிம்களையே பலஸ்தீனில் இருந்து விரட்டியடித்து 1948-ம் ஆண்டு சட்டவிரோதமாக   இஸ்ரேல் உருவாக்கப்பட்டது. அப்போது நடந்த மோதல்களில் பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் பலவந்தமாக தமது சொந்த நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் அகதிகளாக சென்றனர். அப்போது இடம் பெயர்ந்த சுமார் 7 லட்சம் பேர், திரும்பி வர அனுமதிக்கப்பட வேண்டும் என்பது பாலஸ்தீனியர்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்து வருகிறது.இந்த கோரிக்கையை வலியுறுத்தியும், இஸ்ரேல் படையினரின் அத்துமீறல்களை எதிர்த்தும் அவ்வப்போது பாலஸ்தீனியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில், பாலஸ்தீனத்தில் இஸ்ரேல், காசா எல்லையில் நேற்று முன்தினம் (24) பெரிய அளவில் ஒரு போராட்டம் நடந்தது. இஸ்ரேலுக்கு எதிரான இந்த போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். அப்போது தாக்குதலில் ஈடுபட்ட இஸ்ரேல் படையினர் துப்பாக்கிச்சூடும் நடத்தினர். இதில் குண்டுபாய்ந்து பாலஸ்தீனியர் ஒருவர் உயிரிழந்தார். ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் படுகாயம் அடைந்தனர். Palestinain #Israel #Gaza

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *