(ரணில் – மோடி சந்திப்பு…)
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் வாரத்தில் முன்னெடுக்கவுள்ள இந்திய சுற்றுப் பயணத்தின் போது, இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் பிரதமருக்கும் இடையே விசேட சந்திப்பு ஒன்று புது டில்லியில் இடம்பெறவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் பொதுத் தேர்தலும் இலங்கையின் பொதுத் தேர்தலும் எதிர்வரும் வருடத்தில் இடம்பெறவுள்ள நிலையிலான பின்னணியில் குறித்த சந்திப்பு இடம்பெறவுள்ளமையானது, இரு பிரதமர்களுக்கும் குறித்த சந்திப்பானது தீர்மானமிக்க சந்திப்பாக அமையும் என இந்திய ஊடகங்கள் மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.