கொழும்பில் நேர்மையாக நடந்து கொண்ட முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.
முச்சக்கரவண்டி சாரதி முகம்மத் பர்ஷாத் தொடர்பில் ஜனித் திஸ்ஸாநாயக என்பவர் பேஸ்புக்கில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், “அலுவலகத்திற்கு செல்வதற்காக முச்சக்கர வண்டி ஒன்றை வாடகைக்கு பெற்றுக் கொண்டேன். அலுவலகம் செல்வதற்கு முன்னர் வங்கிக்கு செல்ல வேண்டியிருந்தமையினால் முச்சக்கர வண்டியை வங்கிக்கு அருகில் நிறுத்தி விட்டு வங்கிக்கு சென்றேன்.
வங்கிக்குள் சென்ற சற்று நேரத்தில் முச்சக்கர வண்டி சாரதி என்னை அழைத்து, “சேர் உங்கள் பணத்தை தவறவிட்டு சென்றிருக்கின்றீர்கள் என முச்சக்கர வண்டி சாரதி கூறினார்.
குறிப்பிட்ட சாரதியும் வண்டிக்கு வெளியே நின்று இருந்தார்.
நான் பணத்தை அவதானித்தது முதல் வெளியே தான் நிற்கின்றேன் . பணம் சரியாக உள்ளதா என்பதனை சோதித்து பாருக்கள் என சாரதி குறிப்பிட்டார். பணத்தை திருடுபவராக இருந்தால், என்னை அழைத்து இருக்க மாட்டார்.
அதனால் பணத்தை எண்ணி பார்க்காமல் பைக்குள் வைத்து கொண்டு அவரிடம் புகைப்படம் ஒன்றை எடுத்து கொள்ளுவோம் என அவரிடம் கூறினேன். எனினும் அவர் புகைப்படம் எல்லாம் அவசியமில்லை. பணத்தை தொலைத்தவர்கள் படும் வேதனை எனக்கும் தெரியும் என அவர் குறிப்பிட்டார்.
எனினும் ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டேன். இப்படியான நேர்மையான மனிதர்களை பார்க்கும் போது ஆச்சரியமாக தான் உள்ளது” என அவர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த முச்சக்கர வண்டி சாரதியின் நேர்மையை பாராட்டி சமூக வலைத்தளங்களில் பரும் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.