நோர்வூட் நிவ்வெளிகம பகுதியில் தாழிறக்கம் காரணமாக கடந்த சனிக்கிழமை மூடப்பட்டதுடன், தொடர்ச்சியான மழை காரணமாக, வீதி இன்று காலை முழுமையாக தாழிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொகவந்தலாவை – ஹட்டன் பிரதான வீதியின் ஊடாக போக்குவரத்து மேற்கொள்ள முடியாத அளவு வீதி முழுமையாக தாழிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறு அறிவித்தல் வரை மாற்று வழிகளை பயன்படுத்துமாறு வாகன சாரதிகளுக்கு பொலிசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.