(சீகிரியா சுவரோவியங்களைப் பாதுகாப்பதற்கான புதிய திட்டம்)
சீகிரியாவில் உள்ள புராதன சுவரோவியங்களைப் பாதுகாப்பதற்காகவும், முப்பரிமாண தொழினுட்பத்தின் மூலம் காட்சிப்படுத்துவதற்குமான புதிய திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
களனிப் பல்கலைக்கழகம், ஜேர்மனியின் வெமபட் பல்கலைக்கழகம், தொல்பொருள் திணைக்களம் மற்றும் மத்திய கலாசார நிதியம் ஆகியன இணைந்து சீகிரியா சுவரோவியங்களை பாதுகாக்க விசேட திட்டத்தை முன்னெடுத்துள்ளதாக பேராசிரியர் பி.டி. நந்தசேன தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பாதுகாக்கப்பட்டுள்ள மிகவும் பழைமையான சுவரோவியங்களாக சீகிரியா சுவரோவியங்கள் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.