(DIG நாலக சில்வா CID யில் ஆஜரானார்)
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்ஷ, உதவி பொலிஸ் அத்தியட்சர் பிரசன்ன அல்விஸ் ஆகியோரை கொலை செய்ய சதித் செய்யும் விதமாக தொலைபேசியில் கலந்துரையாடப்பட்டதாக கூறப்படும் விவகாரம் தொடர்பில் விசாரணைகளுக்காக பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலகவா இன்று குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகவுள்ளார்.
கொலை சதி விவகாரம் குறித்த விசாரணைகளுக்காக கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வாவுக்கு கடந்த செவ்வாய்க்கிழமை இரகசிய பொலிஸார் முன் ஆஜராக அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்த நிலையில் அவர் ஆஜராகவில்லை.
இந் நிலையிலேயே இன்று பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக சில்வா, சி.ஐ.டி.யின் மனிதப் படு கொலைகள் குறித்த விசாரணை அறையின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ரஞ்ஜித் முனசிங்க முன்னிலையில் ஆஜராகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்.