(தெபுவன பொலிஸ் அலுவலர் மீண்டும் பணியில் இணைப்பு)
தற்காலிகமாக பணிநீக்கம் செய்யப்பட்ட தெபுவன பொலிஸ் அலுவலர் சனத் குணவர்தன, மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.
பொலிஸ்மா அதிபரினால் நேற்று(16) மாலை அவர் மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவண் குணசேகர தெரிவித்துள்ளார்.
பொலிஸ் அலுவலர் சனத் குணவர்தன மற்றும் அவரின் குடும்ப உறுப்பினர்களை நேற்று(16) ஜனாதிபதி செயலகத்திற்கு அழைத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அவர்களுக்கு 10 இலட்சம் ரூபா நிதியுதவி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தம்மால் கைப்பற்றப்பட்ட மணல் ஏற்றிய லொறியை, தெபுவன பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விடுவித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, குறித்த பொலிஸ் அலுவலர் கடந்த தினத்தில் துப்பாக்கியுடன் அமைதியற்ற வகையில் செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.