விஜேராம மாவத்தையில் உள்ள பிரதமர் இல்லத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது என மேலும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் எதிர்வரும் தேர்தலில் நாடு முழுவதும் பொதுஜன பெரமுன தனித்து போட்டி இட வாய்ப்புள்ளது.
முன்னதாக மகிந்த ராஜபக்ச உட்பட அவரின் ஆதரவாளர்கள் சுதந்திரக்கட்சியில் போட்டி இட்டு பாராளுமன்ற உறுப்பினராக இருந்து வந்த நிலையில், பாராளுமன்றம் கலைக்கப்ட்டு பொதுத்தேர்தல் வேலைகள் இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உட்பட சுமார் 50 முன்னாள் (SLFP) எம்பிக்கள் சற்றுமுன் பொதுஜன பெரமுனவுடன் இணைந்துள்ளனர்.