• Mon. Apr 13th, 2026

“ஸ்ரீ லங்கா நிதஹாஸ் பொதுஜன பெரமுன ” புதிய கூட்டணியில் இணைந்து போட்டியிட இரு தலைவர்களும் இணக்கம்

Byadmin

Nov 13, 2018

(“ஸ்ரீ லங்கா நிதஹாஸ் பொதுஜன பெரமுன ” புதிய கூட்டணியில் இணைந்து போட்டியிட இரு தலைவர்களும் இணக்கம்)

நிதஹாஸ் பொதுஜன பெரமுன என்ற புதிய  கூட்டணியை அமைத்து பொதுத்தேர்தலில் இணைந்து போட்டியிடுவதற்கு ஜனாதிபதி சிறிசேனவும் மகிந்த ராஜபக்சவும் இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளனர்.

நேற்றிரவு சிறிசேனவிற்கும் மகிந்தராஜபக்சவிற்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பொன்றின் போது இது குறித்த இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் வெளியேறி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்து வருகின்ற ஒரு சூழ்நிலையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நிதஹாஸ் பொதுஜன பெரமுன என  கூட்டணிக்கு பெயரிடப்பட்டுள்ளது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கும் பொதுஜன பெரமுனவிற்கும் இடையிலான கூட்டணியை குறிக்கும் வகையில் அமைந்துள்ளது.

எனினும் இந்த யோசனையை இரு தலைவர்களும் இன்னமும் தங்கள் கட்சிகளின் சிரேஸ்ட தலைவர்களிடம் சமர்ப்பிக்கவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர்கள் சிலர் கட்சியின் பெயரின் கீழ் போட்டியிடவேண்டும் என கருத்து வெளியிட்டுள்ளனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *