விசாரணையின் தொடர்ச்சி, இன்று முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகவிருக்கின்றது. இந்நிலையில் உயர்நீதிமன்ற வளாகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அங்கிருத்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
(விசாரணை ஆரம்பமானது.. தற்போது உயர்நீதிமன்ற வளாகத்தில் பலத்த பாதுகாப்பு)
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை சட்டவிரோதமானது எனத் தெரிவித்து, உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுக்கள் 13, நேற்றையதினம் தாக்கல் செய்யப்பட்டு, நேற்றையதினமே விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது.