• Fri. Oct 17th, 2025

மூதூர் றிஷானா நபீக்கை இழந்த நாங்கள் முள்ளிப்பொத்தானை அஸ்மியாவையும் இழக்கப்போகின்றோமா?

Byadmin

Nov 29, 2018

(மூதூர் றிஷானா நபீக்கை இழந்த நாங்கள் முள்ளிப்பொத்தானை அஸ்மியாவையும் இழக்கப்போகின்றோமா?)

வறுமையில் பிறந்து, வறுமையுடனே வாழ்ந்து “இரண்டு
பிள்ளைகளின் தாய் பிள்ளைகளின் கண்ணீரையும்
சொந்த வீடு” எனும் கனவுக்காக அன்புப் பிள்ளைகளைத் துறந்து  ஓமான் நாட்டுக்கு வேலைவாய்ப்புக்காகச் சென்ற முள்ளிப்பொத்தானை இல.380/C, யுனிட் – 07 முகவரியினை உடைய அஸ்மியா நோய்வாய்ப்பட்டு நாடு திரும்ப இயலாமல் தவித்துக்கொண்டிருக்கிறார்.
எமது அரசியல் தலைமைகள் அஸ்மியாவை நாட்டுக்கு மீட்டெடுக்க முன்வர வேண்டும். மீண்டும் ஓர் இளம்பெண்ணை எமது மாவட்டம் இழந்துவிடக்கூடாது.
சகோதரி அஸ்மியா விடயம் தொடர்பாக சில பிரமுகர்களுடன் பேசியிருக்கின்றேன். நம்பிக்கைமிக்க பதில் தந்திருக்கின்றார்கள். சகோதரி அஸ்மியாவை மீண்டும் நாட்டுக்கு கொண்டுவருவதற்கு என்னால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளதயாராக இருக்கின்றேன்.
சகோதரியா அஸ்மியா அவர்களை எமது பிரார்த்தனைகளில் இணைத்துக்கொள்வோம்.
Conct- 0754 068 368
இப்படிக்கு உங்கள் 
அன்பின் ஊடகவியாளர்
எம் எஸ் அப்துல் ஹலீம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *