• Sun. Oct 12th, 2025

ரஷியாவுடன் முழு போரில் ஈடுபடுவோம்- உக்ரைன் அதிபர்

Byadmin

Nov 29, 2018

(ரஷியாவுடன் முழு போரில் ஈடுபடுவோம்- உக்ரைன் அதிபர்)

கடந்த காலத்தில் ரஷியாவை ஒட்டி இருந்த பல நாடுகள் சோவியத் யூனியன் என்ற பெயரில் ரஷியாவுடன் இணைந்து ஒரே நாடாக இருந்தன. பின்னர் அந்த நாடுகள் ரஷியாவுடன் இருந்து பிரிந்து சென்று விட்டன. அதில், முக்கிய நாடு உக்ரைன்.

பிரிந்து சென்ற பிறகு இருநாடுகளும் பகை நாடுகளாக மாறி விட்டன. சில ஆண்டுகளுக்கு முன்பு உக்ரைனின் ஒரு பகுதியான கிரிமியாவை ரஷியா தன்னுடன் இணைத்து கொண்டது.

அதன் பிறகு இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு மிகவும் அதிகரித்தது.

இந்த நிலையில் ரஷிய கடல் பகுதியில் சென்ற உக்ரைனின் 4 கப்பல்களை ரஷியா சிறை பிடித்துள்ளது.

இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் வரலாம் என்ற சூழ்நிலை நிலவுகிறது. எனவே, உக்ரைன் தனது படைகளை எல்லையில் குவித்து வருகிறது.

பதிலுக்கு ரஷியாவும் எல்லையில் அதிக ஆயுதங்களை குவித்து வருகிறது. போர் பதட்டம் நிலவுவதால் உக்ரைனில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

இது சம்பந்தமாக உக்ரைன் அதிபர் புரோசென்கோ கூறும் போது, உக்ரைன் கடுமையான மிரட்டலுக்கு ஆளாகி இருக்கிறது.

தற்போது நடக்கும் நிகழ்வுகள் விளையாட்டுத்தனமான வி‌ஷயம் அல்ல. ரஷியா தாக்குதலுக்கு தயாராகி உள்ளது.

எனவே, ரஷியாவுடன் நாங்கள் முழு போரில் ஈடுபடும் நிலை ஏற்பட்டு இருக்கிறது என்று கூறினார்.

தங்களுக்கு உதவும் வகையில் நேட்டோ நாடுகள் தங்கள் நாட்டு கப்பல்களை அனுப்பி வைக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதற்கிடையே ரஷிய அதிபர் புதின் இதுபற்றி கூறும் போது, உக்ரைனுடன் மோதும் எண்ணம் எங்களுக்கு இல்லை. உக்ரைனில் நடக்கும் தேர்தலில் ஆதாயம் பெறுவதற்காக அந்த நாட்டு அதிபர் அச்சுறுத்தல் இருப்பதாகவும், போர் நடக்க போகிறது என்று கூறியும் நாடகம் ஆடுகிறார் என தெரிவித்துள்ளார். #UkrainePresident #PetroPoroshenko

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *