( சுமார் 4 கோடி இலங்கை ரூபா ) நஷ்டஈடு வழங்குமாறு அவுஸ்திரேலிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற உலகக் கிண்ணத் தொரின்போது மேற்கிந்தியத் தீவுகள் அணியின் பெண் மருத்துவ நிபுணரிடம் கெயில் ஆபாச செயலொன்றை வெளிப்படுத்தியதாக அவுஸ்திரேலிய ஊடகமொன்று செய்தி வெளியிட்டிருந்தது.
இதனையடுத்து தன்னைப் பற்றி அவதூறாக எழுதிய அவுஸ்திரேலிய ஊடகம் மீது வழக்குத் தொடர்ந்திருந்தார் கெயில்.
குறித்த வழக்கினை விசாரணை செய்த நியூ சவுத் வேல்ஸ் உச்ச நீதிமன்றம் கெயிலுக்கு ஆதரவான தீர்ப் பை கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் அளித்தது.
இந் நிலையில் அவதூறு வழக்கில் கெயிலுக்கான இழப்பீடாக Aus $300,000 (USD 221,000) டொலர்களை வழங்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.