(5ஜி சோதனை நடத்தப்பட்டதால் நெதர்லாந்தில் செத்து மடிந்த நூற்றுக்கணக்கான பறவைகள் – VIDEO)
நெதர்லாந்தில் நூற்றுக்கணக்கான பறவைகள் செத்து மடிந்துள்ளன. இவை அனைத்தும் 5ஜி செல்போன் சேவையினால் இறந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் தற்போது 4ஜி செல்போன் செயல்பாட்டில் உள்ளது. இதையடுத்து 5ஜி செல்போன் சேவைக்கு சில நாடுகள் மாறி வருகிறது.இதற்கான சோதனைகளில் சில நாடுகள் ஈடுபட்டு வருகின்றன.
இந்த 5ஜி சேவைகளால் வேகம், துல்லியம் ஆகிய வசதிகள் கிடைக்கின்றன. இந்த நிலையில் நெதர்லாந்து நாட்டின் மேற்கே உள்ள தி ஹேக் நகரில் கடந்த அக்டோபர் 26-ஆம் தேதி ஹூகைன்ஸ் பூங்காவில் நூற்றுக்கணக்கான பறவைகள் செத்து செத்து வானத்திலிருந்து கீழே விழுந்தன.
150-க்கும் மேற்பட்ட பறவைகள் இறந்த நிலையில் அதன் எண்ணிக்கை 297-ஆக ஆனது. இதையடுத்து அவ்வழியாக சென்றவர்கள் இதை கண்காணித்தனர்.மரங்களிலிருந்து பறவைகள் செத்து வீழ்ந்தன. மேலும் பல பறவைகள் தலையை தண்ணீருக்குள் விட்டுக் கொண்டன.
இவை அனைத்தும் 5ஜி சோதனை நடத்தப்பட்டதால் அதன் கதிர்வீச்சை எதிர்கொள்ளாமல் பறவைகளுக்கு இறப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.