(பா.ஜனதா இஸ்லாதிற்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளது – இம்ரான் கான்)
பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்ற பின்னர் இம்ரான்கான், இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என கோரிக்கையை விடுத்து வருகிறார். இருப்பினும் இந்தியா தரப்பில் நிராகரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் வாஷிங்டன் போஸ்ட் செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில் இம்ரான்கான், இந்தியாவில் ஆளும் கட்சியான பா.ஜனதா இஸ்லாம் மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளது. இந்தியாவில் அடுத்தாண்டு நடைபெறும் பொதுத்தேர்தலை அடுத்து இருதரப்பு பேச்சுவார்த்தை தொடங்கும் என நம்பிக்கையை தெரிவித்துள்ளார். #ImranKhan #bjp