(10 தடவைகள் ஜனாதிபதி என்னை பிரதமராக பதவியேற்கும் படி கோரினார்)
10 தடவைகள் பல்வேறு சந்தர்ப்பங்களில் ஜனாதிபதி தன்னை பிரதமராக பதவியேற்கும் படி கோரினார் என ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.
தன் மீது வைத்த நம்பிக்கைக்கு ஜனாதிபதிக்கு நன்றி சொல்ல தான் கடமைப்பட்டுள்ளதாக கூறிய அவர் எல்லாவற்றுக்கும் ஒரு முறை இருப்பதாகவும்,மற்றவர்களை மிதித்துகொண்டு போய் பதவி எடுக்க முடியது எனவும் அவர் குறிப்பிட்டார்.