• Sun. Oct 12th, 2025

விளையாட்டு வீரர்கள் கட்டாயம் வாழைப்பழத்தை ஏன் உட்கொள்ள வேண்டும்?

Byadmin

Dec 4, 2018

(விளையாட்டு வீரர்கள் கட்டாயம் வாழைப்பழத்தை ஏன் உட்கொள்ள வேண்டும்?)

நீங்கள் சிறந்த விளையாட்டு வீரர்களாக இருப்பதற்கு பல பயிற்சிகளை மேற்கொள்வது அவசியமானது. அதற்காக ஓடுதல், கார்டியோ பயிற்சிகள், பாரம் தூக்குதல் போன்ற பல பயிற்சிகளை செய்ததன் பின்னர் சக்தி தரும் பானங்களை அருந்துவதை எல்லோரும் பழக்கமாக்கியுள்ளீர்கள். ஆனால் வியாபாரத்திற்காக இவை செய்யப்படும் தந்திரம் என்பதே உண்மை.

கடினமான பயிற்சிகளின் போது தசைப் பகுதிகளின் புரோட்டின் அளவு குறைவடைவதுடன் வியர்ப்பதனால் அதிக நீர்ச்சத்துக்களும் கனியுப்புக்களும் வெளியேறுகின்றன. இதனை சமநிலைப்படுத்துவதற்கு காபோஹைரேட் உணவுகளை உட்கொள்வதும், பானங்களை அருந்துவதும் அவசியமானது.

சந்தையில் தயாரித்து விற்கப்படும் பானங்கள் அணைத்தும் அதிகளவான சுகரினால் தயாரிக்கப்பட்டது. அத்துடன் இவற்றில் அதிகளவான இரசாயணப் பதார்த்தங்களும், பானத்தை பாதுகாக்கும் பதார்த்தங்களும் சேர்த்துக் கொள்வதனால் உடலிற்கு தீங்கையே ஏற்படுத்தும்.

பல ஆய்வுகளின் போது கூறப்படுவது சக்தி தரும் பானங்களை அருந்துவதை தவிர்த்து அதர்கு பதிலாக வாழைப்பழத்தை உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் இன்றியமையாதது.
சக்தி தரும் பானங்களிற்கு பணத்தை செலவிடுவதை விடுத்து வாழைப்பழத்தை உட்கொள்வது மிகவும் சிறந்தது.

சக்தி தரும் பானங்களிற்கு பதிலாக வாழைப்பழத்தை ஏன் உட்கொள்ள வேண்டும்?

1. தசைப் பிடிப்புக்களை குணமாக்கும்.
வாழைப்பழத்தில் அதிகளவான பொட்டாசியம் இருப்பதனால் தசைப் பிடிப்புக்களில் இருந்து தீர்வைத் தரும்.

2. வீக்கத்தைக் குணப்படுத்தும்.
பயிற்சிகளின் பின் ஏற்படும் வீக்கங்களை வாழப்பழத்தால் இலகுவாகக் குணப்படுத்த முடியும்.

3. உடனடியாக சக்தி கிடைக்கும்.
வாழப்பழத்தில் இயற்கையான இனிப்புச் சுவை இருப்பதனால் செயற்கையான பானங்களை விட விரைவாக சக்தியைத் தருகிறது.

4. உடலில் இருந்து நச்சுத் தன்மையை வெளியேற்றும்.
சக்தி தரும் பானங்களில் நச்சுப் பொருட்கள் இரசாயணப் பொருட்கள் வடிவில் உள்ளது. ஆனால் வாழைப்பழத்தை சாப்பிடுவதனால் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும்.

5. அண்டிஒக்ஸிடனை வழங்குதல்.
பயிற்சிகளின் பின் உடல் பாதிப்படையாமல் இருப்பதற்கு அண்டிஒக்ஸிடன் உதவுகிறது. வாழப்பழத்தில் அண்டிஒக்ஸிடன் இருப்பதனால் நோய்கள் வராமல் பாதுகாக்கின்றது.

6. உடல் வெப்பத்தை சீராக்குதல்.
ஜிம் மற்றும் உடற்பயிற்சியின் பின் வாழைப்பழத்தை சாப்பிடுவதனால் அதிகரித்து இருக்கும் உடல் வெப்பநிலையை குறைத்து சராசரியாக உடல் செயற்படுவதற்கு உதவும். எனவே அடுத்த தடவை ஜிம் செல்லும் போது சக்தி தரும் பானத்திற்கு பதிலாக ஒரு ஜோடி வாழைப்பழத்தை எடுத்து செல்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *