குழந்தை ஒன்றுக்கு தாயாவதென்பது எவ்வளவு பெரிய சந்தோஷமோ, அதைப் போல குழந்தையை உறங்க வைப்பதென்பது மிகக் கடினமான விடயமாகும்.
பச்சிளம் குழந்தைகளை தாய்மார்கள் உறங்க வைக்க மேற்கொள்ளும் செயல்களை ஓரிரு வார்த்தைகளால் சொல்ல முடியாது. பல தாய்மார்கள் எவ்வளவு முயற்சி எடுப்பினும், அவர்களது குழந்தைகளை உறங்க வைக்க முடியாது தவிப்பர்.
கவலை வேண்டாம். பின்வரும் வழிமுறைகளை பின்பற்றினால் போதும். குழந்தை தானாக உறங்கி விடும்.
01. இரவு வேளைகளை அமைதியான தாகமாற்ற வேண்டும். அதனால் குழந்தை எந்த இடையூறும் இன்றி உறங்கும். இரவில் குழந்தை விழித்துக் கொண்டதும் அவ்வாறிருந்தே தாய்ப் பால் அருந்தக் கொடுத்து உறங்க விட வேண்டும். மாறாக குழந்தையை தூக்கி மறுபுறம் வைத்தல், மின்விளக்கை போடுதல் என்பன குழந்தையின் தூக்கத்தை கலைக்கும் செயல்களாகும்.
02. இரவு நேரங்களில் குழந்தை விழித்து அழ ஆரம்பித்ததும், அழுகையை நிறுத்தும் பொருட்டு விளையாட்டுப் பொருட்களை வைத்து விளையாட்டு காண்பிக்கக் கூடாது. ஏனெனில், அழுகையை நிறுத்திய குழந்தை விளையாட ஆரம்பித்து விடுவது மட்டுமல்லாது அதையே பழக்கப்படுத்திக் கொள்ளும்.
04. குழந்தைக்கு ஏப்பம் வரவைக்க வேண்டும். குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டி முடித்தவுடன் ஏப்பத்தை வரவழைக்க வேண்டும். தாய்ப்பால் ஊட்டுவதற்கு முன்னதாகவும் ஏப்பத்தை வரவைக்க வேண்டும். குழந்தையின் முதுகில் மெதுவாக தடவிக் கொடுப்பதன் மூலம் ஏப்பத்தை வரவழைக்க முடியும். அத்துடன் குழந்தையும் நிம்மதியான உறக்கத்தை பெறும்.
05. குழந்தையை உறங்க வைக்க முற்படும் போது தாயின் தொடுகை அல்லது அரவணைப்பு அவசியம். தாய் குழந்தையை தொடுவது குழந்தைக்கு இதமாக இருக்கும். எனவே உறங்க வைக்க முற்படும் போது குழந்தைக்கு இதமாக குழந்தையை தொடுவது சிறந்தது.