அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தி பீஸ்ட் (The Beast) என அழைக்கப்படும் 8 கோடி ரூபாய் மதிப்புள்ள லிமோஸின் காரை தான் தற்போது பயன்படுத்தி வருகின்றார்.
எப்பேற்பட்ட தாக்குதல்களையும் சமாளிக்கும் இந்த காரானது இராணுவ பாணியில் தயாரிக்கப்பட்டுள்ளது.
ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் 12 லிமோஸின் கார்களை தயாரித்து பலகட்ட சோதனைகளுக்கு பிறகு அமெரிக்க ஜனாதிபதியின் பயன்பாட்டிற்கு கொடுத்துள்ளது.
அதிக எடையுடன் இருக்கும் இந்த லிமோஸின் கார்கள், டீசல் எரிபொருள் கொண்டு ஓடும். அலுமினியம், ஸ்டீல், டைட்டேனியம், செராமிக் என பலமான உலோகங்களை கொண்டு உருவாக்கப்பட்ட இந்த லிமோஸின் கார், 5 அங்குல தடிமனுடன் மிலிட்டரி கிரேட் ரக கட்டுமானத்துடன் தயாரிக்கப்பட்டதாகும்.
பம்ப்-ஆக்ஷன் ரக ஷாட்-கன் துப்பாக்கி மற்றும் கண்ணீர் வாயு வெடிகள் காரின் முன்பக்கத்திலும் பின்பக்கத்திலும் மறைத்து வைக்கப்பட்டுள்ளன.
இரவிலும் தெளிவான படங்களை எடுக்கும் ”நைட் விஷன்” கேமரா ஆகிய பல வசதிகளை கொண்டது இந்த லிமோஸின்.
ஜன்னல் கண்ணாடிகள் அனைத்தும் ஐந்து லேயர்களை கொண்ட பாலி-கார்போனேட் மற்றும் கண்ணாடியின் கலவையில் தயாரிக்கப்பட்டவை ஆகும்.
44 ரக துப்பாக்கி தோட்டாக்களாலும் அந்த கண்ணாடிகளை துலைக்க முடியாது என்பது தான் மிகவும் ஆச்சர்யமளிக்க கூடியதாகும்.
ஓட்டுனரின் ஜன்னல் கண்ணாடி தவிர வேறு எந்த கண்ணாடியையும் திறக்க முடியாது. காரின் முன்பக்க கண்ணாடி ஆர்மர்களால் கூட துலைக்க முடியாத 5 அங்குல தடிமன் கண்ணாடிகளால் உருவாக்கப்பட்டதாகும்.
காரின் கதவுகள் 8 அங்குல தடிமனுடன் தயாரிக்கப்பட்டவை ஆகும். இந்த காரின் கதவுகள் ஒவ்வொன்றும் போயிங் 757 ஜெட் விமானத்தின் கதவுகளை விட எடை அதிகமாகும். இந்த காரின் கதவுகள் எந்த ரசாயன கலவையாலும் எந்த வித சேதத்தையும் ஏற்படுத்த முடியாத அளவுக்கு சிறந்த கட்டுமானத்தை கொண்டதாகும்.
டீசல் தொட்டியை சுற்றி ஒரு புதிய ரக ஃபோம் உபயோகிதுள்ளதால், டீசல் தொட்டியை நேடியாக தாக்கினாலும் வெடிப்புக்குள்ளாகாது. அதனுள்ளே பயன்படுத்தப்பட்ட அந்த தொழில்நுட்பத்தை வெளியிடாமல் காத்து வருகிறது கெடிலாக் நிறுவனம்.
இருக்கையில் இருந்து கைக்கு எட்டும் தூரத்தில் ஒரு சாட்டிலைட் ஃபோன் பொருத்தப்பட்டுள்ளது. அதில் துனை ஜனாதிபதியின் எண் மற்றும் பெண்டகன் அலுவலக எண் இருக்கும். ஆபத்து நேரத்தில் தானாகவே அபாய ஒலியை எழுப்பும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.
காரின் பின்புறத்தில் தீயனைப்பு கருவிகள், ஆக்ஸிஜன் வாயு நிரப்பப்பட்ட சிலிண்டர், ஜனாதிபதியின் ரத்த வகையில் ரத்தம் ஆகியன இருக்கின்றன.
மிலிட்டரியால் பல கட்ட தேர்வுகள் நடத்தப்பட்டு, ஒரு கை தேர்ந்த ஓட்டுனரை தேர்வு செய்து அவரை இந்த லிமோஸின் காரின் ஓட்டுனராக நியமிப்பர்.இந்த லிமோஸின் காரின் இந்திய மதிப்பு கிட்டத்தட்ட 8 கோடி ரூபாய் ஆகும்.