இஸ்லாமியர்களின் புனித ரமழான் கால விடுமுறையை மேலும் ஒருவாரம் நீடித்து சவுதி அரேபியா அரசு உத்தரவிட்டுள்ளது.
இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் மூன்றாவது கடமையான ரமலான் மாத நோன்பு காலத்தையொட்டி சவுதி அரேபியா நாட்டில் அரசு ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய பத்து நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம்.
குறித்த இந்த விடுமுறைக் காலம் எதிர்வரும் 25ம் திகதி முடிவடையவுள்ள நிலையில் ரம்ஜான் கால விடுமுறையை மேலும் ஒருவாரம் நீடித்து சவுதி அரேபியா அரசு உத்தரவிட்டுள்ளது.
சவுதி நாட்டுக்கான புதிய பட்டத்து இளவரசரை அந்நாட்டு மன்னர் சல்மான் அறிவித்துள்ள நிலையில் அந்நாட்டு அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் விடுமுறை நீடிப்பு தொடர்பான இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.