( காணாமல்போன தொலைபேசியை கண்டறிய இணையத்தளம் அறிமுகம் #இலங்கை )
மொபைல் தொலைபேசி காணாமல் போதல் மற்றும் திருடப்பட்டமைத் தொடர்பில் பொலிஸ்
தலைமையகத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட இணையத்தளத்துக்கு ஒரே நாளில் 800 -1000 முறைபாடுகள் வரை கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
நேற்றிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்ட www.ineed.police.lk என்ற இணைய முகவரிக்கே குறித்த முறைபாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவித்துள்ள அவர், 24 மில்லியனுக்கும் அதிகமானோர் இலங்கையில் அலைபேசியைப் பயன்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.