(“தேர்தல் ஒன்று இல்லாமல் பிரதமர் பதவியில் இருக்கும் தேவை எனக்கில்லை” – மஹிந்த)
பொதுத் தேர்தல் ஒன்று இல்லாமல் பிரதமர் பதவியில் இருக்கும் தேவை தனக்கில்லை என்று மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.
ஜனாதிபதி அடுத்தகட்ட நடவடிக்கையை எடுப்பதற்கு வசதியாகவே, தான் பிரதமர் பதவியை இராஜினாமா செய்ததாக அவர் கூறியுள்ளார்.
தனது பதவி விலகல் குறித்து ஊடகங்களுக்கு விடுத்துள்ள விஷேட அறிக்கை மூலம் அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.