• Mon. Apr 6th, 2026

ராஜிதவுக்கு சுகாதார அமைச்சை வழங்கக் கூடாது ; GMO ஜனாதிபதிக்கு கடிதம்..

Byadmin

Dec 17, 2018

(ராஜிதவுக்கு சுகாதார அமைச்சை வழங்கக் கூடாது ; GMO ஜனாதிபதிக்கு கடிதம்..)

முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு, மீண்டும் சுகாதார அமைச்சர் பதவியே வழங்கப்படவுள்ளதாக, தகவல்கள் வெளியானதையடுத்து, அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அரசாங்க வைத்திய சங்கத்தின் 14 ஆயிரம் வைத்தியர்கள் கைச்சாத்திட்டு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, கடி​தமொன்றை கையளித்தாக அந்த சங்கம் அறிவித்துள்ளது.
 
ராஜிதவின் பதவிக்காலத்தில், வைத்தியர்களுக்கு எதிராக பாரிய உரிமை மீறல் இடம்பெற்றதாக, அக்கடித்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், புதிய அமைச்சரவையில், ராஜித சேனாரத்னவுக்கு, சுகாதார அமைச்சுப் பதவியை வழங்க வேண்டாமென அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *