• Wed. Apr 8th, 2026

இன்று முதல் பேரூந்து கட்டணம் குறைப்பு…

Byadmin

Dec 26, 2018

(இன்று முதல் பேரூந்து கட்டணம் குறைப்பு…)

பேரூந்து , முச்சக்கரவண்டி மற்றும் பாடசாலை வேன் கட்டணங்களை இன்று(26) முதல் குறைப்பதற்கு, அந்தந்த சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அதன் பயனை பொதுமக்களுக்கு பெற்றுக்கொடுக்கும் வகையில் பேரூந்து மற்றும் முச்சக்கரவண்டி கட்டணங்களைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி,, இன்று(26) நள்ளிரவு முதல் பேரூந்து கட்டணத்தை 4 வீதத்தால் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.

எனினும், ஆகக் குறைந்த பேருந்து பயணக் கட்டணத்தில் மாற்றம் ஏற்படுத்தப்படவில்லை எனவும், 12 ரூபா என்ற ஆகக் குறைந்த கட்டணம் அவ்வாறே அறவிடப்படுவதுடன், 15 ரூபா முதல் 43 வரையிலான கட்டணங்களில் ஒரு ரூபாவினால் குறைக்கப்படவுள்ளன.

இதேவேளை, தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பேருந்து பயணக் கட்டணங்களும் குறைக்கப்பட உள்ளன. மஹரகம முதல் காலி வரையிலான கட்டணம் 440 ரூபாவாகவும், மஹரகம முதல் மாத்தறை வரையிலான கட்டணம் 550 ரூபாவாகவும் குறைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *