• Thu. Apr 9th, 2026

புதிய அமைச்சர்களின் பொறுப்புகள் – அரசிதழ் அறிவிப்பு தாமதம்

Byadmin

Dec 26, 2018

(புதிய அமைச்சர்களின் பொறுப்புகள் – அரசிதழ் அறிவிப்பு தாமதம்)

-கி.தவசீலன்-
புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்ட போதும், அவர்களுக்கான அமைச்சுக்கள், பொறுப்புகள் தொடர்பான அரசிதழ் அறிவிப்பு வெளியிடப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டதை அடுத்து, 28 அமைச்சர்களும், நியமிக்கப்பட்டனர்.
அதன் பின்னர், அமைச்சரவையில் இடம்பெறாத அமைச்சர்கள், இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்களும் நியமிக்கப்பட்டனர்.
எனினும், புதிய அமைச்சர்களுக்கான பொறுப்புகள், துறைகளை உள்ளடக்கிய அரசிதழ் அறிவிப்பு இன்னமும் வெளியிடப்படவில்லை.
இந்தவாரம் இதுபற்றிய அறிவிப்பு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட போதும், மேலும் தாமதம் ஏற்படும் என்று கூறப்படுகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *