• Sun. Oct 12th, 2025

முஸ்லிம் சமய திணைக்களத்தின் இப்தார் நிகழ்வு

Byadmin

Jun 22, 2017

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வு (15) வியாழக்கிழமை திணைக்களத்தில் இடம்பெற்றது.

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அஷ்ஷேக் எம். ஆர். எம் மலீக் (நளீமி) தலைமையிலும் அஷ்ஷேக் எம்.எம்.எம். முப்தி(நளீமி)யின் ஒருங்கிணைப்பிலும் இடம்பெற்ற இப்தார் நிகழ்வில், தபால், தபால் சேவைகள் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் அமைச்சர். எம். எச். ஏ ஹலீம்  பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் 2017 இல் நடத்தப்பட்ட தேசிய கிராத் போட்டியில் ஆண்கள் சிரேஷ்ட பிரிவில்  முதற் இடத்தைப் பெற்ற ஹிஸாம் நௌஸரினால் கிராத் ஓதப்பட்டதோடு, தஸ்கர அல் –  ஹக்கானி மத்ரஸாவின் விரிவுரையாளர் நஸார் ரகுமான் (மஸுதி) மௌலவி  பயான் நிகழ்த்தினார்.

நிகழ்வில், தபால், தபால் சேவைகள் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் கப்பு ஆராய்ச்சி, முஸ்லிம் சமய  கலாசார அமைச்சின் உயர் அதிகாரிகள், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பழைய, புதிய ஊழியர்கள், அரச உயர் அதிகாரிகள்  உட்பட பல பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

-எம்.எஸ்.எம்.ஸாகிர் –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *