• Sun. Oct 12th, 2025

இலங்கை துறைமுக அதிகார சபையின் இப்தார் நிகழ்வு

Byadmin

Jun 22, 2017

இலங்கை துறைமுக அதிகாரசபை, முஸ்லிம் மஜ்லிஸினூடாக வருடாந்தம் நடத்தும் இப்தார் நிகழ்வு இவ்வாண்டு இரத்துச் செய்யப்பட்டு அதற்கு ஒதுக்கப்பட்ட ரூபா பத்து இலட்சம் அண்மையில் ஏற்பட்ட வெள்ள நிவாரணத்திற்கு வழங்கப்பட்டது.

இவ்வருடமும் இலங்கை துறைமுக அதிகார சபையின் விசேட இப்தார் நிகழ்வினை நடாத்துவதற்கு முஸ்லிம் மஜ்லிஸ் ஏற்பாடுகளை மேற்கொண்ட நிலையில் முஸ்லிம் மஜ்லிஸ் நிர்வாகம் கடந்த மாதம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு அனர்த்தங்களைக் கருத்திற்கொண்டு இவ்வருட துறைமுக விசேட இப்தார் நிகழ்வை இரத்துச் செய்து அதற்கு செலவாகும் சுமார் பத்து இலட்சம் ரூபாவினை இவ்வனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கை துறைமுக அதிகாரசபை ஊழியர்களுக்கு வழங்குமாறு முஸ்லிம் மஜ்லிஸ் நிர்வாகம் துறைமுக அதிகாரசபையின் முகாமைத்துவத்திற்குத் தெரிவித்தது. முகாமைத்துவமும் முஸ்லிம் மஸ்லிஸின் தீர்மானத்தை ஏற்றுக் கொண்டது.

இதேநேரம் எளிமையான முறையில்   துறைமுக பள்ளிவாலில் இடம்பெற்ற வழமையான இப்தார் நிகழ்வில், துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சர்  மஹிந்த சமரசிங்க, அமைச்சின் செயலாளர் ஜயம்பதி, இலங்கை துறைமுக அதிகாரசபையின் தலைவர் பாராக்ரம திஸாநாயக்க உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மற்றும் துறைமுக முஸ்லிம் ஊழியர்கள் எனப் பலரும் இப்தார் நிகழ்வில் கலந்து கொண்டதைப் படங்களில் காணலாம்.

-எம்.எஸ்.எம்.ஸாகிர் –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *