(சின்ன வயசில வேலைக்கார பெண்ணை கற்பழிக்க முயன்றேன் – பிலிப்பைன்ஸ் அதிபர் பேச்சால் சர்ச்சை!)
பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ துதர்தே சர்ச்சைக்கு பெயர் போனவர். பொது மேடையில் தகாத முறையில் பேசி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். ஏற்கனவே பெண்களின் கற்பு குறித்தும், பாலியல் வன்கொடுமைகள் குறித்தும் கருத்து தெரிவித்து கண்டனத்துக்கு உள்ளானார்.
இந்த நிலையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய ரோட்ரிகோ துதர்தே, தன்னுடைய பள்ளி பருவத்தில் தனது வீட்டு வேலைக்கார பெண்ணை தகாத முறையில் தொட்டதாக கூறி அங்கிருந்தவர்களை அதிரவைத்தார். இதுபற்றி அவர் பேசியதாவது:-
நான் பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் ஒரு நாள் பள்ளி முடிந்து வீடு திரும்பியபோது, எங்கள் வீட்டில் வேலைப்பார்த்த பெண் ஒரு அறையில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது நான் அறைக்குள் சென்று அந்த பெண்ணின் போர்வையை விலக்கி, அவரை தொட்டேன். இதனால் அவர் தூக்கத்தில் இருந்து விழித்துக் கொண்டார். உடனே நான் அறையில் இருந்து சென்றுவிட்டேன். பின்னர் மீண்டும் அவர் அறைக்கு சென்று பாலியல் சீண்டல் செய்ய முயன்றேன் இவ்வாறு அவர் பேசினார்.
அவருடைய இந்த பேச்சுக்கு பிலிப்பைன்சை சேர்ந்த மகளிர் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ரோட்ரிகோ துதர்தே அந்த வேலைக்கார பெண்ணை கற்பழிக்க முயன்றதாக குற்றம் சாட்டும் மகளிர் அமைப்புகள் அவர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி உள்ளன.-Source: dailythanthi