• Thu. Apr 9th, 2026

இன்று காலை சிக்கியது ஒரு கோடி 84 இலட்ச ரூபா கஞ்சா

Byadmin

Jan 10, 2019

(இன்று காலை சிக்கியது ஒரு கோடி 84 இலட்ச ரூபா கஞ்சா)

மன்னார், வங்காலை கடற்பகுதியில் வைத்து இன்று (10) அதிகாலை சுமார் ஒரு கோடி 84 இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சாப்பொதிகளுடன் நபர் ஒருவரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

வங்காலை கடற்பகுதியில் பொதி செய்யப்பட்ட நிலையில் 184 கிலோ 200 கிராம் எடை கொண்ட கேரள கஞ்சாப்பொதிகளுடன் உயிலங்குளம் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாப்பொதிகள் மற்றும் கைது செய்யப்பட்ட நபர் வங்காலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். வங்காலை பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *