(புதிய அரசியலமைப்பு ; விஷேட தெரிவுக்குழுவின் அறிக்கை நாளை பாராளுமன்றிற்கு..)
புதிய அரசியலமைப்பு தொடர்பில் பாராளுமன்ற தெரிவுக்குழுவிற்கு பரிந்துரை வழங்க நியமிக்கப்பட்ட விஷேட குழுவின் அறிக்கை நாளை பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று பாராளுமன்றில் கூடிய அரசியலமைப்பு தொடர்பான தெரிவுக்குழு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.