• Wed. Apr 8th, 2026

இன்று(10) மற்றும் நாளை விஷேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்…

Byadmin

Jan 10, 2019

(இன்று(10) மற்றும் நாளை விஷேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்…)

நாட்டின் பல பிரதேசங்களில் விஷேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஒன்று இன்று(10) மற்றும் நாளை(11) முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது.

மேல் மாகாணம், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 40 சுகாதாரப் பிரிவுகளில் இந்த வேலைத்திட்டம் மேற்கொள்ளப்பட உள்ளது.

தற்போது நிலவுகின்ற காலநிலையில் டெங்கு அதிகரிப்பு ஏற்பட்டிருப்பதை அவதானிக்க முடிந்துள்ளமையினால் இந்த விஷேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் மேற்கொள்ளப்படுவதாக சுகாதாரப் பணிப்பாளர் அனில் ஜாசிங்க கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *