முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தலைவர் அமைச்சர் ஹரீஸ் ஜனாதிபதி மற்றும் பிரதமர் இப்தார் நிகழ்வை புறக்கணித்துள்ளதாக அவருக்கு மிக நெருக்கமான வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த காலங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற சம்பவங்களின் போது அமைச்சர் ஹரீஸ் பாராளுமன்றத்தில் உடனுக்குடன் தைரியமாக குரல்கொடுத்திருந்தார்.
பொதுபல சேனா உருவாக்கத்தில் ஐக்கிய தேசிய கட்சி தலைவருக்கு பாரிய பங்கு உள்ளது என நேரடியாக குற்றம் சுமத்தி இருந்த அமைச்சர் ஹரீஸ் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் இப்தார் நிகழ்வுகளை எதிர்ப்பு வெளியிடும் நோக்கில் புறக்கணிப்பு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
3 பா உறுப்பினர்கள் உம்ரா கடமைகளுக்காக மக்கா சென்றுள்ள நிலையில் அவர்கள் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் இப்தார் நிகழ்வுகளில் கலந்துகொள்ளவில்லை .