• Sun. Oct 12th, 2025

ஜனாதிபதி நிதியமானது, நாளை(18) முதல் புதிய முகவரியில்…

Byadmin

Jan 17, 2019

(ஜனாதிபதி நிதியமானது, நாளை(18) முதல் புதிய முகவரியில்…)

தற்போது இயங்கி வரும் ஜனாதிபதி நிதியமானது, இலக்கம் 41, ரேணுகா கட்டிடம், ஜனாதிபதி மாவத்தை, கொழும்பு 01 என்ற முகவரியில் இயங்கி வருகின்ற நிலையில் நாளை(18) முதல் புதிய முகவரியில் இயங்கவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, இலக்கம் 35, மூன்றாம் மாடி, லேக்ஹவுஸ் கட்டிடம், டி.ஆர்.விஜயவர்தன மாவத்தை, கொழும்பு – 10 என்ற முகவரியில் ஜனாதிபதி நிதியம் ஸ்தாபிக்கப்படவுள்ளது.

விரிவான, வினைத்திறனான மக்கள் சேவையை வழங்குவதற்காகவும் சேவைகளை பெற்றுக் கொள்வதற்காக வருகை தரும் மக்களுக்கு வசதிகளை ஏற்படுத்தி தரும் நோக்குடனும் ஜனாதிபதி நிதியத்தை புதிய இடத்தில் நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 21ஆம் திகதி முதல் வழமை போல் ஜனாதிபதி நிதியத்தின் சேவை வழங்கும் நடவடிக்கைகள் இடம்பெறும் என்பதுடன், நிதியத்துடன் தொடர்பு கொள்ளக்கூடிய தொலைபேசி இலக்கங்களில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை என்றும் 011-2331245, 011-2431610, 011-2382316 என்ற இலக்கங்களினூடாக ஜனாதிபதி நிதியத்துடன் தொடர்புகொள்ள முடியும் எனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *